கல்யாண போட்டோ சூட்டில் விபரீதம்! அப்படியே ஆற்றில் கவிழ்ந்த மணமக்கள்! வைரல் வீடியோ உள்ளே!

தற்போது திருமணம் என்றால் கட்டாயம் மணமக்கள் போட்டோ சூட் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. திருமணத்திற்கு முன்பே மணமக்களை நெருக்மாக்கி புகைப்படங்களை எடுத்து தள்ளும் போட்டோகிராபர்களுக்கு மவுசு கூடுகிறது. இதனால் அதற்கு ஏற்ப பல்வேறு திட்டங்களுடன் போட்டோ கிராபர்கள் வெட்டிங் போட்டோ சூட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த புது மணமக்களான டிஜின் – சில்பாவை பம்பை நதிக்கு அழைத்துச் சென்ற புகைப்படக் கலைஞர் படகு ஒன்றில் அமர வைத்து புகைப்படம் எடுக்க ஆயத்தமானார். இலை ஒன்றை டிஜின் – சில்பா தலைக்கு மேல் குடை போல் பிடித்துக் கொள்ளச் செய்து காதல் உணர்வுடன் புகைப்படம் எடுக்க முயன்றார்.

ஆனால் படகு நிலை தடுமாறியதையடுத்து மணமக்கள் இருவரும் ஆற்றில் விழுந்தனர். இந்த வீடியோவை கூட தன்னுடைய விளம்பரத்திற்காக அந்த புகைப்பட கலைஞர் சமூகவலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *