அக்கா.. நீங்க இப்படி செய்யலாமா? சர்ச்சையில் சிக்கிய அரந்தாங்கி நிஷா.

பிரபல ரிவியில் காமெடி முத்திரைகளை பதித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா!

சமீபத்தில் கஜா புயலின்போது, எத்தனை மாவட்ட மக்களுக்கு நிஷா செய்த உதவிகளை மறக்கவே முடியாது. பஸ்கூட போக முடியாத கிராமங்களில், தனது காரை எடுத்து கொண்டு ராத்திரியும் பகலுமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த பணிகளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

இப்போது நிஷா ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார். இவரும், இவருடன் இணைந்து காமெடி ஷோ நடத்தும் பழனி என்பவரும் ஒரு நிகழ்ச்சி செய்துள்ளனர். சமீபத்தில் திமுக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. இருவரும் வழக்கம்போல் இதில் காமெடி செய்துள்ளனர்.

அப்போது, பாஜக குறித்தும், பிரதமர் மோடி, மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் குறித்தும் நிஷாவும், பழனியும் மோசமான விமர்சனங்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, நீட் தேர்வு சம்பந்தமாக இருவரும் தாறுமாறாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் “அக்கா.. நீங்க இப்படி செய்யலாமா.. எவ்ளோ மரியாதை வெச்சிருந்தோம்” என பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.

இதற்கு “மரியாதைக்குரிய தமிழிசை அக்காவை, எந்த ஒரு தவறான எண்ணத்திலும் சொல்லணும்னு நினைச்சது கிடையாது. இருந்தாலும் நான் பேசியது தவறுதான்.

இதை எனக்கு நிறைய பேர் போன் பண்ணி, “நீங்க இப்படி பண்ணக்கூடாதும்மா.. நீங்க இப்படி செய்யலாமா? உங்க மேல எவ்ளோ மரியாதை, அன்பு வெச்சிருக்கோம்னு சொன்னப்புறம்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க. திரும்ப இப்படி நடக்க வாய்ப்பே இல்லை” என்று மன்னிப்பு கேட்டார்.

இதையேதான் பழனியும் பேசும்போது, “என் அண்ணன் பொண்ணு நீட் தேர்வு காரணமாக இறந்ததால் மன வருத்தத்தில் இருந்தேன். அப்பதான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசியதில் யாருக்காவது மனவருத்தம் ஏற்பட்டிருந்தால், அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று சொல்லி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *