அடுத்தவன் மனைவி மீது ஆசை! சரவணபவன் அண்ணாச்சி புழல் சிறையில் களி தின்பதின் உண்மை பின்னணி!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. சரவண பவன் உணவக மேலாளரின் மகள் இவர். இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் பிரின்ஸ் சாந்த குமாரை காதலித்து ஜீவஜோதி திருமணம் செய்து கொண்டார். இங்கு தான் ஜீவசோதிக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. ஏனென்றால் தந்தை வேலை பார்க்கும் சரவண பவனுக்கு அடிக்கடி ஜீவஜோதி சென்று வந்தார். அப்போது தான் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் பார்வை ஜீவஜோதி மீது படுகிறது. பிறகு ஜீவஜோதிக்கும் சரவண பவனில் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறார் அண்ணாச்சி. அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கிறார். இதனை அறிந்த ஜீவஜோதியின் தந்தை மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.

ஆனால் ஜீவஜோதி தான் பிரின்சை காதலிப்பதாக கூறி அவரை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகும் கூட ராஜகோபால் – ஜீவஜோதி உறவு தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என ஒரு ஜோதிடம் ராஜகோபாருக்கு ஆலோசனை கூறுகிறார். இந்த சூழலில் தான் 2001-ம் ஆண்டு ஜீவஜோதியை  மறுமணம் செய்யும்  நோக்கத்தில் சாந்தகுமாரை  கொடைக்கானலுக்கு  கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல்  சிறைத்  தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும்  வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்

ராஜகோபால் உள்ளிட்டவர்கள்அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அதே சமயம் அரசு தரப்பில், 10 ஆண்டுகள் சிறைத்  தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க  வேண்டும் என்று அப்பீல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் 2009-ம் ஆண்டு  தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகள்  பி.கே. மிஸ்ரா,  பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைதண்டனையை  ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது.மேலும், ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன்  பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும்,   இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள்  தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,  ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. 7ம் தேதி அவர்கள் நீதிமன்றததில் சரண் அடைந்து சிறைக்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் ராஜகோபால்

இழுத்தடித்து இன்று ஒரு வழியாக சிறைக்கு சென்று இருக்கிறார். உலகம் முழுவதும் 120 கிளைகள் சரவண பவன் ஓட்டல் வைத்திருக்கும் ராஜகோபால் தோசை சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர். ஆனால் நாளை முதல் அவர் சிறையில் களியும், சுடு சோறும் மட்டும் தான் சாப்பிட முடியும்.