டிக்டாக்கால் சிதைந்த அழகான குடும்பம்..!! தடம்மாறிப் போன காதல் மனைவி செய்த விபரீத செயல்..!!

தமிழகத்தில் இளம்பெண் டிக்டாக்குக்கு அடிமையானதால் அவர் குடும்பமே சிதைந்துள்ளது. திருச்சியை சேர்ந்த இளம் தம்பதி மகேஷ் – திவ்யா. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் மகன் திவ்யாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், “குழந்தைகள் நலக்குழு” வில் மகேஷ் ஒரு புகாரை அளித்தார். அதில், என் மனைவி திவ்யாவுக்கு டிக்டாக் செயலி மூலம் அன்சாரி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் எனது மகனை அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

மகனை மீட்டு தன்னுடன் அழைத்து செல்வதற்கும், மகனை அடித்து கொடுமைப்படுத்திய அன்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகாரில் கூறியுள்ளார். இதோடு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் டிக்டாக், பேஸ்புக் போன்றவை தான் திவ்யா தன்னை விட்டு பிரியவும், மணவாழ்க்கையில் விரிசல் ஏற்படவும் முக்கிய காரணம் என்று மகேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.