13 வயது கோவை சிறுமியை தூக்கிய 15 வயது பீகார் சிறுவன்! அதிர்ச்சியில் போலீஸ்!

கோவையில் 13 வயது சிறுமி ஒருவரை 15 வயது பீகார் சிறுவன் ஒருவன் தூக்கியதாக  புகார் எழுந்துள்ளது. கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று காலை முதல் பிரியா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து குமார் கோவை சின்னியம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் குமார் பணியாற்றும் மில்லில்

வேலை செய்து வந்த பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் 13 வயது சிறுமி பேசி வந்தது தெரியவந்தது. இதனை குமார் கண்டித்த நிலையில் சிறுமி மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவனை தேடினர். அப்போது தான் அவனும் மாயமானது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுவனுடன் சிறுமி புறப்பட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிறுவன் பீகார் மாநிலத்திற்கு ரயிலில் செல்ல டிக்கெட் எடுத்திருப்பதை

கண்டுபிடித்தனர். இதனை அடுத்து பிகார் மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.