அப்படி சேர்ந்த வாழ்வதற்கு பிரிந்தே வாழலாம்..!! நடிகை சீதாவை விவாகரத்து செய்தது ஏன்? முதல் முறையாக மனம் திறந்த நடிகர் பார்த்திபன்

சினிமாவில் கொடிகட்டி பறந்த போதே வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சீதா. ஆண்பாவம் படத்தில் அறிமுகமான சீதா, புதிய பாதை என்ற படத்தில் பார்த்திபனுடன் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டார். இவர்களது காதல் வீட்டுக்கு தெரிந்து எதிர்ப்பு எழ, பெற்றோரை எதிர்த்து ஓடிவந்து பார்த்திபனை கரம்பிடித்தார். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வெடித்தது. இதனால் இருவரும் சமரசமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.

இதுகுறித்து பார்த்திபன் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னை பொறுத்த வரையில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் முழுக்க முழுக்க சென்டிமெண்டுகள், எமோஷனல் நிறைந்தது. வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுபாடுகள், வேறுபாடுகள் வரத்தான் செய்யும், இந்த சண்டைகள் மணமுறிவு என்ற நிலைக்கு சென்றுவிட்டால் பிரிவது கூட காதலில் இணைந்தது தான்.

அனைத்தையும் சகித்துக் கொண்டு கடைசிவரை வாழ வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை, இந்த வாழ்க்கை எனக்கு ஒருமுறை தான், அந்த பெண்ணுக்கும் அப்படித்தான். வருத்தங்களுடன் வாழ்வதற்கு பதிலாக பிரிந்து சந்தோஷமாக வாழலாம்,

இதுவும் கூட காதல் தான் என தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை இருவரும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.