அம்பிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா !! லிவிங்ஸ்டன் மகளுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் !! இருவரின் புகைப்படம் உள்ளே !!

80 களில் தென்னிந்திய சினிமாவை தன்வசம் வைத்திருந்தவர்கள் அம்பிகா-ராதா சகோதரிகள். இவர்கள் இருவரும்தான் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து கலக்கி வந்தனர். அதிலும் அம்பிகா தனது தங்கையான ராதா திரைக்கு வருவதற்கு முன்பே நடிக்க வந்துவிட்டார். ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக் என அனைத்து நடிகர்களுடனும் நடித்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர். இதுவரை 200 படங்களுக்கு மேல் அம்பிகா நடித்துள்ளார். தற்போதுவரையில் சில கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல படங்களில் நடித்து வருகிறார்.

பல சீரியலிகளிலும் முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார் அம்பிகா. அம்பிகாவிற்கு ராம் கேஷவ், ரிஷிகேஷ் என்று இரண்டு மகன் உள்ளனர். இதில் ராம் கேஷவ் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். “கலாசல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை சுந்தர் சி, பத்ரி ஆகிய இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த அஸ்வின் மாதவ் என்பர்

இயக்குகிறார் கலாசல் படத்தின் கதாநாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கிறார். இருவருமே சினிமா பின்னணியில் வந்த நடிகர்கள் என்பதால் நடிப்பிற்கு எந்த குறையுமாம் இல்லாமல் இருக்கும் என்கின்றனர். இதோ அம்பிகா அவர்களின் மகன் மற்றும் லிவிங்ஸ்டன் அவர்களின் மகள் புகைப்படம்.