விவாகரத்து செய்த கணவருடன் மீண்டும் ஓட்டம் பிடித்த மனைவி !! தலை சுற்றவைக்கும் சம்பவம் !! அடக்கொடுமையே இப்படியும் நடக்குமா ??

திருமண வாழ்க்கை என்பது அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாதஒன்று. அணைத்து திருமணங்களும் சரியான பாதையில் சென்றுவிடுவதில்லை.பல திருமணங்கள் சரியான துணையை தேடாத காரணத்தால் விவகாரத்தில் முடிகின்றன.ஆனால் இந்த சம்பவம் மிகவும் வித்தியாசமானது என்ன நடந்துச்சுன்னு நீங்களே படிங்க !! இந்தியாவில் விவாகரத்து செய்த கணவருடன் இளம் மனைவி மீண்டும் ஓட்டம் பிடித்த நிலையில் கணவரின் தாய் அடித்து உதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலத்தின் கம்பீர்புரா கிராமத்தை சேர்ந்தவர் சுகாபாய் தத்வி. இவர் மகள் மீனாட்சி.

அதே கிராமத்தை சேர்ந்தவர் விச்சிபன். இவர் மகன் அனில்.அனிலும், மீனாட்சியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் நான்கு மாதங்கள் கழித்து ஆகஸ்டில் தம்பதி விவாகரத்து பெற்று அவரவர் பெற்றோருடன் வசித்தனர். இந்நிலையில் அனிலும், மீனாட்சியும் கடந்த வாரம் மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சியின் குடும்பத்தார் நேராக அனில் வீட்டுக்கு வந்து தனியாக இருந்த அவர் தாய் விச்சிபனை சரமாரியாக அடித்து உடைத்தனர்.

இதையடுத்து தலை மற்றும் கை கால்களில் பலத்த அடியுடன் விச்சிபன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்த அவரின் வாக்குமூலத்தின் பேரில் பொலிசார் மீனாட்சியின் குடும்பத்தினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

பொலிசார் கூறுகையில், அனிலும் மீனாட்சியும் எதற்காக விவாகரத்து பெற்றார்கள் மற்றும் என்ன காரணத்துக்காக மீண்டும் சேர்ந்து ஓட்டம் பிடித்தார்கள் என தெரியவில்லை.இருவரையும் தேடி வருகிறோம், அவர்களை கண்டுபிடித்த பின்னரே அனைத்து உண்மைகளும் வெளிவரும் என