பிரபல தொகுப்பாளினி டிடி-யை விவாகரத்து செய்தது ஏன்? உண்மை காரணத்தை அதிரடியாக உடைத்த கணவர்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் சிலரில் நம் நினைவுக்கு வரும் டிடியின் விவாகரத்திற்கான உண்மை காரணத்தை அதிரடியாக உடைத்த கணவர். சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். கடந்த 2016ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது.

இதற்கு எந்தவொரு பதிலளிக்காமல் இருந்து வந்தார் டிடி. அதன் பின்பு தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி எனப் போடப்பட்டிருந்ததை வைத்து இவர்களின் பிரிவினை நெட்டிசன்கள் உறுதியாக்கினர். டிடி – ஸ்ரீகாந்த் இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்

கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் அப்படி என்ன பிரச்சனை என பலருக்கும் தெரியாமல் இருந்தது. இது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல்

சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.