அடிக்கடி சோர்வாக இருப்பதாக கூறிய 13 வயது சிறுமி !! ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி !!

தமிழகத்தில் காதலியின் மகளை கர்ப்பமாக்கிய கொடூரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில் சசிகுமாரின் நடத்தையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சாந்தா என்பவருடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாந்தாவின் கணவர் இறந்ததால் தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.இதனால் வறுமை சாந்தாவையும் அவளின் மகளையும் துரத்தியது. மகள் இரணியலில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் சந்தாவுக்கு சசிகுமார் பணம் உதவி செய்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகினார்கள்.

இந்நிலையில் அவரின் சல்லாப புத்தி சாந்தாவின் மகள் மீது திரும்பியது.இதனிடையில் அடிக்கடி பள்ளியிலும் வீட்டிலும் சோர்வாக இருந்து வந்த மகளை சாந்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது சாந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகாரில் பொலிசார் விசாரித்ததில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் சசிகுமார் என தெரியவந்தது.கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டு அடிக்கடி வரும் சசிகுமார் சாந்தாவிடம் பணத்தை கொடுத்து

பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு மது போதையில் மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததை மாணவி கூறியுள்ளார்.இதையடுத்து பொலிசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.