இன்றைய கால கட்டத்தில் நம் அனைவருக்கும் பொழுது போக்காக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். நெறய தொலைக்காட்சிகளில் வித விதமான தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், சீரியலில் நடிகை ஷிவானி தனுஷின் பாடலை பாடி ரசிகர்களை குஷிப்ப டுத்தியுள்ளார்.
ஷிவானி எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் தனது ரசிகர்கள் மகிழும் படி, வித விதமான படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது பாடல் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஷிவானிக்கு நல்ல குரல் வளம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.