அட்டகாசமாய் தொடங்கியது.. சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஹீரோவாக நடிக்கும் படம் – ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜெண்ட் சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது. சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் முன்பு விக்ரம்.

அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக யார் தெரியுமா..? ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற வட இந்திய மாடல் ஈத்திகா திவாரி. மேலும், முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார். பேண்டஸி ஜானரில் எடுக்கபப்டும் இந்தப் படத்தை, ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இன்று தொடங்கியது.