அணியில் இடம் வேண்டுமா. ஹோட்டலுக்கு பெண்களை அனுப்பு. ஆடியோ வெளியானதால் சிக்கிய பிரபலம்

இதில், திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சர்வ சாதாரணம் தான். ஆனால் இது சினிமாவிற்கு மட்டுமல்ல அணைத்து துறைகளிலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்றால் பெண்களை தன்னுடன் படுக்கைக்கு அனுப்பு வேண்டும் என்று கேட்டதாக ஐபிஎல் தலைவரின் உதவியாளர் அக்ரம் சைஃபி மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஐபிஎல் தொடரின் தலைவர் ராஜீவ் சுஹக்லாவின் உதிவியாளராக இருப்பவர் தான் அக்ரம் சைஃபி.

இந்நிலையில் உத்ரபிரதேச மாநிலம் ராகுல் சர்மா என்ற இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை மீண்டும் உத்தர பிரதேச மாநில அணியில் சேர்த்துக்கொள்ள டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பெண்களை அனுப்பிவைக்குமாறு கேட்டதாக, அக்ரம் சைஃபி மீது பிசிசிஐ நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், ராகுல் ஷர்மா மற்றும் அக்ரம் சைஃபி ஆகியோர் பேசிய ஆடியோ பதிவு ஒன்றும் தொலைக்காட்சியில் வெளியாகி சர்ச்சையை எழுப்பியது.அக்ரம் சைஃபி பிசிசிஐ நிர்வாகத்தின் சம்பளம் பெரும் ஒரு ஊழியராக இருந்து வருகிறார். இதனால் பிசிசிஐ 32 வது விதிப்படி இது தொடர்பான விசாரணையை துவங்க விரைவில் கமிஷன் ஒன்றை நிர்ணையிக்கவுள்ளது.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய அக்ரம் சைஃபி ” ராகுல் சர்மா என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய். ராகுல் சர்மா மாநில அணியிலோ ஜூனியர் அணியிலோ ஆடியது கிடையாது. நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய நபர்களுடன் பணிபுரிவதால் என்மீது பலரும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

மேலும், 2015 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து அப்போதே சொல்லாமல்பல ஆண்டுகள் கழித்து இப்போது குற்றம்சாட்டுவதற்கு என்ன காரணம்” என்று கூறியுள்ளார்.