அண்ணனுடன் தவறான உறவு வைத்திருந்த மனைவியை கண்டித்த கணவன் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் புண்ணம் பகுதியில் வசித்து வந்தவர் கைலாசம்(35). இவரின் மனைவி லதா (23). இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது லதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனந்த் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் சொந்தமாக வெல்டிங் வொர்க் ஷாப் நடத்தி வருகிறார். தினமும் மனைவி லதாவை தனது அழைத்து செல்வதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
கடந்த 19ம் தேதி இரவு பணிமுடிந்து ஆனந்த் மனைவி லதாவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். காட்டுப்பாளையம் அருகே வந்த போது ஹெல்மெட் அணிந்து இருவர் இரு சக்கரவாகனத்தில் கைலாசத்தை வழி மறித்தனர். ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கைலாசத்தின் கழுத்தை அறுத்து அவரை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளான். அதன்பின் இருவரும் தப்பி சென்றுவிட்டனர். இதைக்கண்டு லதா கதறி துடித்தார். போலீசாரின் விசாரணையில் லதாவின் பெரியம்மாவின் மகன் ஆனந்த் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனந்தும், லதாவும் அண்ணன் – தங்கை என்கிற உறவையும் மீறி உடல் அளவில் நெருக்கமாக பழகியுள்ளனர். அந்த சமயத்தில் தான் 4 வருடங்களுக்கு முன்பு லதாவிற்கும், கைலாஷத்திற்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பின் லதாவின் வீட்டிற்கு ஆனந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார். லதாவிற்கு ஆனந்த் அண்ணன் முறை என்பதால், கைலாஷம் குடும்பத்தினருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால், நாளடைவில், ஆனந்த் லதாவுடன் அண்ணன் முறையில் பழகவில்லை என்பதை புரிந்து கொண்டனர். ஒருமுறை வீட்டிற்கு வந்து லதாவுடன் நெருக்கமாக நின்று செல்பி எடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கைலாஷத்தின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆனந்தை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும், ஆனந்தை வீட்டிற்கு வரவும் கைலாஷ் குடும்பத்தினர் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து லதாவை வொர்க் ஷாப்புக்கு தன்னுடனேயே தினமும் கைலாஷ் அழைத்து சென்றார். கடந்த 3 மாதங்களாக லதாவை ஆனந்தால் பார்க்க முடியவில்லை. பேச முடியவில்லை. இதில், ஆனந்த் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில்தான், கடந்த 19ம் தேதி ஆனந்த் தனது நண்பருடன் வந்து கைலாஷத்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. திருச்சியில் பதுங்கியிருந்த ஆனந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் லதாவிற்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.