பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பார் நாகராஜ் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார வழக்கை மூடி மறைத்து முக்கிய குற்றவாளியை பொள்ளாச்சி போலீசார் தப்பவிட்ட அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் பொள்ளாச்சி காவல்துறையினர் எவ்வளவு மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரம் தினம் தினம் வீடியோவாக வெளியாகி வருகின்றது..! அந்தவகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்களிடம் கடந்த 20 ந்தேதி சிக்கிய சபரிராஜன் என்கிற ரிஸ்வந்தையும், திருநாவுக்கரசுவையும் விசாரித்த போது பெண்களை மிரட்டி அத்துமீறிய கொடுமையை அவர்களே ஒப்புக் கொண்டனர்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கொடூரர்கள் சபரிராஜனுக்கும், திருநாவுக்கரசுவுக்கும் கொடுத்த சிறப்பு கவனிப்பு தான் இந்த காட்சிகள் இந்த பாலியல் ராட்சதர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் ஐபோனுடன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசில் உள்ள ஒரு சில ஆட்காட்டிகள் எப்படியும் இந்த விவகாரத்தில் தங்கள் வேலையை காட்டுவார்கள் என்பது தெரிந்தே புகார் அளித்தவர்கள் சற்று உஷாராகவே இருந்துள்ளனர். இருந்தாலும் மதுபான பார் மாமூல் மூலம் போலீசாரிடம் நெருக்கம் காட்டிய பார் நாகராஜ்பல பெண்களை சீரழித்த வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அதனை எல்லாம் அழித்து விட்டு, அவனிடம் புகார் அளித்தவரின் விவரத்தை போட்டு கொடுத்துள்ளது போலீசில் உள்ள சில கருப்பு ஆடுகள்..!
தன்னுடையஅரசியல் செல்வாக்கு அடியாட்கள் பலத்தை வைத்து புகார் கொடுத்த இளைஞரை தாக்கி புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டி உள்ளான் பார் நாகராஜ். அதன் பின்னர் தான் இந்தவிவகாரம் பூதாகரமாய் கிளம்பியுள்ளது. திமுகவழக்கறிஞர்கள் இந்த பிரச்சனைக்குஎதிராக குரல் எழுப்ப தொடங்கினர். கோவை எஸ்.பி. பாண்டியராஜின் நேரடி அழுத்தம் காரணமாக பார் நாகராஜ் மீது சாதாரன அடிதடி வழக்கு மட்டும் பதிவு செய்து கண்துடைப்புக்காக கைது செய்தது போலீஸ் என்றும்பின்னர் இரு தினங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவன் தலைமறைவாக இருந்து கொண்டு, புகாரை வாபஸ் பெற வில்லை எனில் தன்னிடம் உள்ள வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவேன் என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களை மீண்டும் மீண்டும் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
பிரச்சனை அரசியலாக்கப்பட்டதால் அதிர்ந்துபோன அதிமுக ,பார் நாகராஜனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது. இந்த நிலையில் பண்ணை வீட்டில் வைத்து பார் நாகராஜன் பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் புதன் கிழமை வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பொள்ளாச்சி இளைஞர்கள் பார் நாகராஜனின் பாரை அடித்து உடைத்தனர்
இந்நிலையில் இது சம்மந்தமாக வீடியோ ஒன்றை பார் நாகராஜ் வெளியிட்டுள்ளார். அதில், அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது சதீஷ் என உறுதி செய்துள்ள அவர், தன் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருப்பதாகவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன் மீதான அடிதடி வழக்கு தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு தயார் எனவும் கூறியுள்ளார்.
Bro Ivan thaan bar nagaraj, don’t believe the fake news and spread that pic.twitter.com/42kg89FmG9
— Saravanan Selvaraj (@Saravan32954509) March 14, 2019