கேரளா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது மூணாறு, இந்நிலையில் அங்கு சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் தம்பதியினர் காரில் வந்துள்ளனர். அப்போது மூணாறு செல்லும் வழியில் அந்த காரில் இருந்த 1 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று காரின் ஜன்னல் வழியே கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அதை கண்டுகொள்ளாமல் கார் மிகவும் வேகமாக சென்றது. இந்நிலையில் கீழே விழுந்த குழந்தை அங்கு அழுது கொண்டிருந்தது இந்நிலையில் அந்த வழியே சென்ற வயதான நபர் ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது குழந்தை புல்வெளியில் தவழ்ந்தபடி அழுது கொண்டிருந்தது.

உடனே குழந்தையை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது காரின் ஜன்னல் வழியாகக் குழந்தை கீழே விழுவது பதிவாகியிருந்தது. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த கார் யாருடையது என்று கண்டறிந்து

உடனே அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர்கள் மூணாறு காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மற்றும் அவரது குழந்தையை காவல்துறையினர்
பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மற்றும் குழந்தையை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்த வயதான நபரை காவல்துறையினர் மற்றும் அக்குழந்தையின் பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
#WATCH Kerala: A one-year-old child falls out of a moving car in Munnar region of Idukki district. The girl child was later rescued and handed over to the parents. (08.09.2019) pic.twitter.com/tlI7DtsgxU
— ANI (@ANI) September 9, 2019