அத பத்தி நானே கவல படல.. அவளுக்கு என்னவாம்..? – VJ மஹாலட்சுமியின் மறுபக்கம்..!

நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான “வம்சம்” சீரியலில் நடித்து பிரபலமான் சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார்களை அடுக்கி வருகிறார். அந்த புகாரில் பிரதானமாக சின்னதிரை நடிகையும், பிரபல VJ-வுமான மஹாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ, VJ மஹாலக்ஷ்மியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னிடம் விவாகரத்து கேட்டு துன்புறுத்தினார். ஆனால், என்னால் விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். என் மாமியாரும் இதற்கு உடந்தை. நான் விவாகரத்து தர மறுத்ததால், ஒருகட்டத்தில் எங்கள் வீட்டில் என் கண்முன்னே மகாலட்சுமியிடம் வீடியோ கால் செய்து கொஞ்சி குலாவிக்கொண்டிருப்பார்.

மேலும், மஹாலக்ஷ்மியின் குழந்தையிடம் , என்னை அப்பா என்று கூப்பிடு என்று கூறுவார். இதனால் நானும் என் மகளும் கடுமையான் மன உளைச்சலுக்கு ஆளானோம். தினமும் குடித்துவிட்டு என் வயிற்றின் மீது எட்டி தாக்குவார். அந்த வலி இன்னும் எனக்கு இருக்கிறது. மேலும்,  நடுவீட்டில் என் கண் முன்னே சிறுநீர் கழிப்பார். இந்த கொடுமையெல்லாம் என்னால் பொறுக்கமுடியாமல் தான் இப்போது புகார் கொடுத்தேன். இந்த விஷயத்தை அறிந்துகொண்ட மஹாலக்ஷ்மி தலைமறைவாகி விட்டாள் என்று கூறியுள்ளார்.