அன்று கணவனை கண் முன்னே துடி துடிக்க கொலை செய்த கும்பல்..இன்று பெண் தாதாவா மாறி நிற்கும் மனைவிக்கு தடை! எதற்கு தெரியுமா?

தமிழகத்தில் பெண் தாதா என்றழைக்கப்படும் எழிலரசி வரும் மக்களவை தேர்தல் முடியும் வரை காரைக்கால் பகுதியில் நுழையக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளது அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ராமு, இவர் வினோத என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்திருந்தார், அதன் பின் எழிலரசி என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சொத்து பிரச்சனை விவகாரமாக கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு இரண்டாவது மனைவி எழிலரசியோடு ராமு சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த கூலிப்படையினர் எழிலரசி கண்முன்னே ராமுவை துடிதுடிக்க கொலை செய்தனர்.

அதுமட்டுமின்றி எழிலரசியையும் முகங்களில் வெட்டிசிதைத்தனர், எழிலரசி அவர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். அதன் பின் அதற்கு பழி தீர்க்கும் வகையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் ராமன் கொலைக்கு காரணமான திருப்பட்டினம் ஐயப்பன், முன்னாள் அமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பாக எழிலரசி சிறையில் இருந்து, சிலமாதங்களுக்கு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காரைக்காலில் உள்ள முக்கிய பிரமுகர் அவரின் உதவியை நாடியிருக்கின்றனர். இந்த தகவல் மற்ற அரசியல் கட்சியினர் மூலம் காக்கிகளுக்கு தெரியவர, எழிலரசி காரைக்கால் வந்தால் தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும்

அதனால் எழிலரசி தேர்தல் முடியும்வரை காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று காரைக்கால் சீனியர் எஸ்.பி துணை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இரண்டு மாதத்திற்கு எழிலரசி காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்கப்பட்டுள்ளது.