அபிராமியை கண்டுகொல்லாத உறவினர்கள்: எனக்காக இதை மட்டும் செய்யுங்கள் என கதறல்

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி தன் சொந்த பந்தங்களிடம் கோரிக்கை வைத்து கதறி வருகிறார்.குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.இதையடுத்து சுந்தரத்துடன் ஓடி போவதற்காக தனது இரண்டு குழந்தைகளை அபிராமி கொலை செய்தார்.இதன்பின்னர் பொலிசார் அபிராமியை கைது  விசாரித்ததில் கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே,

குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தியானம், யோகா என பொழுதைக் கழித்து வருகிறார்.

பெரும்பாலான் நேரங்களில் அழுது கொண்டே இருக்கும் அவர் யாருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.அதே நேரத்தில் அபிராமியை அவரது உறவினர்கள் இதுவரை யாரும் பார்க்க வரவில்லை.

இதனால் கடும் மன உளைச்சலில் உள்ள அவர் சிறை அதிகாரிகளிடம், தனது உறவினர்களிடம் கூறி தன்னை ஜாமீனில் எடுக்க வேண்டும் என கதறி அழுது வருவதாக கூறப்படுகிறது.