அபிராமியை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி. சுந்தரம் வாக்குமூலம்..!

குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர் கொடுத்த அறிவுரையின் பேரில் எனது இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிட்டு, எனது கணவனை கொலை செய்ய காத்திருந்தேன், ஆனால் அவர் வர தாமதமானதால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என அபிராமி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், குழந்தைகளை கொலை செய்வதற்கு நான் அறிவுரை வழங்கவில்லை என்றும் நாங்கள் வீட்டை விட்டு ஓடிப்போக மட்டுமே முடிவு செய்தோம் என சுந்தரம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.மேலும், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் வேலை செய்யும் பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் குறிப்பிட்ட அளவை விட்ட அதிக அளவில் பிரியாணி கொடுத்து அபிராமியுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டேன்.அதன் பின் அவர் தொலைபேசியில் பிரியாணி ஆர்டர் கொடுப்பார். அப்போது, வீட்டிற்கு சென்று பிரியாணி கொடுத்துவிட்டு, அவருடன் உல்லாசமாக இருப்பேன். என் வீட்டிற்கும் அவரை அழைத்து சென்றுள்ளேன்,

இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக சுற்றத்திரிந்தோம்.மேலும், அவளது அழகையும் அவ்வப்போது வர்ணிப்பேன், இதனால் அவளுக்கு என் மீது காதல் அதிகரித்தது என கூறியுள்ளார்.