அப்போ நாங்க குளிப்பதை ஜன்னல், கதவு வழியாக..? சன் டிவி சீரியல் நடிகை சொன்ன பகீர் தகவல்

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் சாங்கில் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் சாந்தி. இவர் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானாலும், இவர் மிகப் பெரிய நடன இயக்குனர் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இவர் திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்களைப் பெற்றி பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தமிழ் படமான லட்சுமி படத்தில் வரும் குழந்தைபோலத்தான் நானும், சினிமா பாடல்களைப் பார்த்தே நடனம் கத்துக்கிட்டேன். இப்போ ரியாலிட்டி ஷோக்கள் இருப்பது போன்று நான் சிறுவயதில் இருக்கும் போது ரியாலிட்டி ஷோக்கள் கிடையாது. சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் என்னுடை சிறப்பான டான்ஸ் மூலம் டான்ஸ் யூனியன்ல உறுப்பினரானேன்.

நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அதனால வேலை வாய்ப்புக்கு நான் கஷ்டப்படலை. 13 வயசுல சினிமாவுல, குரூப் டான்ஸரா சேர்ந்தேன். மழை, வெயில், பனினு எல்லாச் சூழல்லயும் வேலை செய்தே ஆகணும். நடிகர், நடிகைகள் எத்தனை முறை டேக் எடுத்தாலும், நாங்களும் ஆடித்தான் ஆகணும். காலில் செப்பல்கூட இல்லாம டான்ஸ் ஆடுவோம். நான் ரொம்ப உயரமா, ரொம்ப ஒல்லியா இருப்பேன். நிறமும் கறுப்புதான். அப்போதைய டிரெண்டுக்கு கொஞ்சம் பப்ளியா இருக்கிற பெண் டான்ஸர்களுக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுப்பாங்க. அதனால என்னைப் பெரும்பாலும் பின் வரிசையிலதான் நிற்கவைப்பாங்க, அதை எல்லாம் நீங்க பார்க்கனும்னா 1990-களின் பாடல் காட்சிகளில் பார்க்கலாம். என்னை பென்சில் டான்சர் என்று எல்லாம் கிண்டல் செய்திருக்காங்க,

எனக்கு எந்த பேக்ரவுண்டும் இல்லை. அதனால டான்ஸராகவும் அசிஸ்டென்ட் மாஸ்டராகவும் சுமார் 3,000 பாடல்களுக்கு மேல வேலை செய்தேன். என்னுடைய திறமையை பார்த்து பலரும் நான் அசிஸ்டண்ட் டான்ஸ் மாஸ்டரா இருந்தப்போ, பலரும் உங்க திறமைக்கு மாஸ்டர் ஆகிடுங்கனு சொன்னாங்க, ஆனா நான் டான்ஸ் மாஸ்டர் ஆன பின்பு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அப்படி சொன்னவங்க கிட்ட எல்லாம் வெட்கத்தை விட்டு வாய்ப்பு கேட்டிருக்கேன். ஆனால் அப்போ யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை, ரெம்ப கஷ்டப்பட்டு தான் இப்போ டான்ஸ் மாஸ்டாரா வந்து நிற்கிறேன் என்று கூறிய அவர், என்னுடைய ஆரம்ப கட்டத்தில், பாடல்களின் சூழலுக்கு ஏற்ப, மாடர்ன் டிரெஸ் அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

என் டிரெஸ்ஸைப் பார்த்து, ஷூட்டிங் வேடிக்கைபார்க்க வரும் ஆண்கள்ல பலரும் கிண்டல் பண்ணுவாங்க. ரயில்ல போறப்போக்கூட பல ஆண்கள் கிண்டல் பண்ணுவாங்க. இதனால் நான் அழுதிருக்கிறேன். ரயில்ல, பஸ்ல தூங்கும்போது சில ஆண்கள் வக்கிற புத்தியில என்னை டச் பண்ணி, அதனால பெரிய சண்டைகளெல்லாம் வந்திருக்கு. வெளியூர் ஷூட்டிங்ல, டான்ஸர்களுக்கு நல்ல ரூம்கூட இருக்காது. ஜன்னல்ல, கதவு ஓட்டையில நாங்க குளிக்கிறதைப் பார்க்க ஒரு கும்பல் இருக்கும்.

அதையெல்லாம் மீறித்தான் பெண் டான்ஸர்கள், எங்க பாதுகாப்பை உறுதிசெய்துப்போம். அப்போ எங்க டான்ஸ் டீம் ஆண்கள்தான் ஆதரவா பாதுகாப்புக்கு இருப்பாங்க என்று கூறியுள்ளார். மேலும் மெட்டி ஒலி சன் டிவி சீரியலில் ஆடிய பாடல் மூலம் தான் என்னை பலருக்கும் தெரிந்திருந்தாலும், டான்ஸ் மாஸ்டரா ஓரளவுக்குப் புகழ்பெற்றிருந்தாலும், 26 வருட சினிமா பயணத்துல நான் எதிர்பார்த்த அளவுக்கு புகழ் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார். சாந்தி சன் டிவியில் குலதெய்வம் சீரியலில் நடித்திருந்தார், தொடர்ந்து தற்போது சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.