அரக்கோணம் அதிர்ச்சி! பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட விபரீதம்! 1 குழந்தை உயிரிழப்பு 3 குழந்தைகள் உயிர் ஊசல்!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம், புது காலனி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சீனிவாசன். சீனிவாசன் உறவினர் இறந்ததை தொடர்ந்து அவர்களின் 16 ஆம் நாள் ஈமசடங்குக்கு தினத்திற்கு பினியாணி செய்து உண்டுள்ளனர். இதில் மீதமிருந்த பிரியாணியை சீனிவாசன் மற்றும் அவரது மனை கனகா, 8 வயது குழந்தை மோகன் ராசு மற்றும் 5 வயது பெண் குழந்தை கோபிகா மற்றும் சீனிவசன் தம்பி ஐயப்பனின் 11 வயசு மகள் சுமித்திரா, 3 வயசு மகன் போத்திஸ் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். அதாவது முதல் நாள் செய்த பிரியாணியை கொண்டுவந்து வீட்டில் பிரிட்ஜில் வைத்து நேற்று காலை குழந்தைகளுக்கு சுடு வைத்து சாப்பிட்ட கொடுத்துள்ளனர்.

சாப்பிட்டு விட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இன்று மதியம் நான்கு பேருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து போத்தீஸ், மோகன்ராசு சுமித்ரா ஆகிய 3 பேரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த நிலையில் சிறுமி கோபிகாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர். ஆனால் கோபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சூடு வைத்து பிரியாணியை சாப்பிட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த கோபிகா குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.