அலுவலக லிப்ட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட IT ஊழியர் ..!!! வேலையை விட்டு வீட்டுக்கு வந்த பெண் – சின்மயின் ட்வீட்.

சின்மயி அருமையான பாடகர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படத்தில் “மாதரே மாதரே” என்ற பாடல் பாடினார். இவர் ஒரு சிறந்த பாடகர் மற்றும் இல்லை பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசி அவர்களுக்கு நடந்த சீண்டல்களை கேட்டு அறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்க உதவி செய்வார்.

அந்த வகையில் ஒரு ஐடி துறையில் இருக்கும் ஒருவர் லிப்ட்டில் சென்று கொண்டு இருக்கும் பொழுது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயிடம் புகார் அளித்துள்ளார். உடனே சின்மயி இதனை காவல்துறையினரிடம் சொல்லுவோம் என்று கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் எனக்கு திருமணம் செய்ய வரம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இதனை பெரிதாக்க வேணாம் . என் குடும்பத்துக்காக நான் அமைதியாக இருந்து தான் ஆக வேண்டும் என்று கவலையுடன் ட்வீட் செய்து உள்ளார்.

சின்மயி தைரியமாக கவிஞர் வைரமுத்து மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பெண் ட்வீட். இது போன்ற குற்றங்களை  தடுக்க நம் அனைத்து பெண்களையும் தனது அம்மா, சகோதிரி ஸ்தானத்தில் நினைக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.