காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.இது குறித்து அவர் கவலையடைந்தாலும் தன்னம்பிக்கையை விடவில்லை.
அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அழகான அவர் தற்போது தலை முடியை மொட்டையடித்துள்ளார்.அவரின் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். படுக்கையில் கிடந்தாலும் அவர் தனக்கு பிரியமான புத்தகத்தை வாசிக்க தவறுவதில்லை. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
இது குறித்து தற்போது சட்டசபை உறுப்பினர் ஒருவர் அவர் மரணம் அடைந்துவிட்டதாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இது நெட்டிசன்கள் கவனத்திற்கு வர அனைவரும் இவரை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.அங்கங்கே இவருக்கு பல கண்டன குரல்களும் வந்த வண்ணம் உள்ளது.பின்னர் அவர் அந்த பதிவை எடுத்துவிட்டார்.
அவர் தன்னுடைய நண்பர்களுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை கடந்தமாதம் பதிவிட்டுள்ளார் இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது