தென்னிந்திய சினிமாவில் பலராலும் மறக்க முடியாத ஒரு முகம் தான் ஸ்ரீதேவி.இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.பிரபல நடிகர் நாட்டாமை புகழ் விஜய குமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் தங்கையுமான இவர் ரிக்ஷா மாமா படத்தில் குழந்தையாக சினிமா துறைக்கு வந்தார்.
பின் தமிழில் காதல் வைரஸ் படம் மூலம் அவர் ஹீரோயினாக எண்ட்ரி ஆனார். மாதவனுடன் பிரியமான தோழி இந்த படம் இவருக்கு நிறைய பெயர் வாங்கி குடுத்த படம், தனுஷுடன் தேவதையை கண்டேன் என சில படங்கள் இவருக்கு முக்கியமானதாக அமைந்தன.
அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கடைசியாக கன்னடத்தில் 2006 ல் லக்ஷ்மணா படத்தில் நடித்தார். பின் அவர் வாய்ப்புகள் இல்லாத நிலையில் இல்லற வாழ்க்கையை தேட தொடங்கினர் பின்பு 2009 தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அவர்கள் ரூபிகா என பெயர் வைத்துள்ளனர். அக்குழந்தைக்கு நேற்று 2 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.பிறந்தநாள் விழாவிற்கு முக்கிய பிரபலங்கள் மட்டுமே அழைக்க பட்டார்கள்.