அழுது கொண்டே குழந்தையின் உடலை தூ க்கி வந்த தாய்..! ஊரடங்கில் நடந்த சோகம்..! கண்கலங்க வைத்த வீடியோ..!

நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை கேட்க்கிறோம் பார்க்கிறோம். அவைகளில் ஒரு சிலவை மட்டும் நம் மனதில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில்  பீகாரின் ஜெகனாபாத்தில் உயிரிழந்த 3 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் கதறிக்கொண்டு வீதியில் நடந்து வந்துள்ள காட்சி தற்போது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் ஜெகனாபாத்தில் உள்ள ஒரு தம்பதி தங்களுடைய 3 வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் போக்குவரத்து ஏதும் இல்லாததால் ஆம்புலன்ஸ் சேவையை அணுகியதாக கூறப்படும் நிலையில், ஆம்புலன்ஸ் அனுப்புவதற்கு அரசு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனை அடுத்து குழந்தையை தன் மார்போடு அணைத்தபடி அக்குழந்தையின் தாய் அழுதுகொண்டே சாலையில் தூக்கிச் சென்ற சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ….