அவனிடம் தினம் தினம் நான் அனுபவித்த சித்ரவதைகள்….பிரிவதற்கு இதுதான் காரணம்: மனம் திறந்த நடிகை

பிரபல இந்தி நடிகை Chahatt Khanna தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நிலையில், தான் அனுபவித்த நரக வேதனைகள் குறித்து மனம் திறந்துள்ளார். நடிகை Chahatt Khanna 2013 ஆம் ஆண்டு Farhan Mirza என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனது கணவரை விட்டு கடந்த ஒரு மாதமாக பிரிந்து வாழும் நடிகை, அவரிடம் இருந்து தற்போது விவாகரத்து கோரியுள்ளார். இதற்கான காரணம் குறித்து தனது நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், திருமண வாழ்க்கையில் நான் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.

எனது கணவரிடம் இருந்து முன்கூட்டியே விவாகரத்து பெற்றுவிட முடிவுசெய்தேன், ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். என்னை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் என்னை இணைத்து அவர் தவறாக பேசுவார். நடிகருடன் நான் கைகோர்த்து நடிக்கும் காட்சியை பார்த்துவிட்டு என்னை தவறாக விமர்சிப்பார். நான் யாரேனும் நண்பர்களது விருந்து நிகழ்ச்சிக்கு சென்றால், என்னுடன் வந்து அங்கு நடப்பவற்றை பார்த்துவிட்டு, வீட்டில் வந்து என்னை தவறாக விமர்சிப்பார்.

ஒருமுறை நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன், அப்போது என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அவரிடம் கெஞ்சினேன், ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.

குறிப்பாக என்னை, மனரீதியாக தொல்லை செய்தார். மேலும், பாலியல் உறவுக்கு மட்டும் நான் பயன்படுகிறேன் என்று அவர் கருதியதால் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.