ஆசையாக மனைவி சமையலை சாப்பிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: அடக்கொடுமையே ..!! கணவன்மார்களே உஷார்

தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் – கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் கலைமணியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரன் கடந்த மாதம் 8-ஆம் திகதி உயிரிழந்தார். அவர் சடலத்தை பார்த்து கலைமணி இப்படி குடித்து குடித்தே இறந்து விட்டாயே என கதறி அழுதார். பிறகு திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார்.

அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லாத்தையும் எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார். திடீரென மருமகள் மாயமானதால் மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஒருநாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்த மாமனார் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார்.தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவர் கூறியதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அப்போது அவர் உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதையடுத்து பொலிசார் கலைமணியிடம் விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் அவர் கக்கினார். எனக்கும் அழகர்சாமிக்கு கள்ள உறவு இருந்தது. இதை என் கணவர் ஈஸ்வரன் கண்டுப்பிடித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ஈஸ்வரனுக்கு ஆசையாக சாப்பாடு தருவது போல அதில் விஷத்தை கலந்து கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவர் இறந்துவிட்டார் என்றார். இதையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.