ஆசையால் நாசமாகிய பெண்..! பாலியல் தொழிலுக்கு சென்ற அம்மாவிடம்.. மகள் கேட்ட அந்த ஒரு வார்த்தை!

காதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்… இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம்தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது.அன்பு, பாசம், நேசம், ஈர்ப்பு, பற்று, இனக்கவர்ச்சி, காமம்… எல்லாவற்றுக்கும் பொத்தாம் பொதுவாக காதல் என்று ஓர் அர்த்தத்தை வைத்ததன் விளைவுதான் காதல் என்றாலே சிலர் முகம் சுளிக்கக் காரணம்! ஆனால், இவை அனைத்துமே காதல் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கிவிடும்.

இந்நிலையில், இந்த காதலால் அதிகளவில் விபரீதங்களும் நிகழ்கின்றன. அதில் ஒன்று தான் இந்த கதை.அதாவது, ஒரு கிராமத்து இளம்பெண் முல்லையின் காதல்.முல்லை, இவர் ஒரு பெரிய பண்ணைவீட்டுக்காரரின் மகள். ஊரிலேயே பெரிய வீடும் அவர்களுடையது தான். அப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் ஒரு இளைஞர் மீது காதல் வயப்பட, அவர்களின் காதல் வீட்டிற்கு தெரியவர, காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடி சென்னை வந்து விடுகின்றனர்.

பின்பு, இவர்களின் வாழ்க்கை ஒரு குழந்தை பிறக்கும் வரை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது. திடீரென்று இவர்களின் வாழ்க்கையில் அடித்தது பெரிய புயல். ஆம், அவனும் கள்ளக் காதல் என்ற ஒரு புதரில் மூழ்கி விட்டான். அந்த பெண்ணுடன் சேர்ந்து ஓடிவிட்டான்.பின்பு, நீண்ட நாட்களுக்கு பின்னர் தான் முல்லைக்கு இந்த விடயம் தெரியவந்துள்ளது. அப்போது, முல்லையின் தோழியை பார்த்து அவன் ஓடிவிட்டான். இனி என் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. வாழ்க்கை கேள்விகுறியாகிவிட்டது என புலம்பவே, தோழி தவறான பாதைக்கு திருப்பி விட்டாள்.

முல்லையும், குடும்ப சூழ்நிலை, குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில், விபச்சாரத்திற்கு சென்று விட்டார்.பின்பு, தன் குழந்தை கேட்ட ஒரு கேள்வியால் மனம் நொந்து விபச்சாரத்தை விட்டுவிட்டு நல்ல வேளைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவரது முதலாளி, ஒருநாள் உன் மீது ஆசையாக இருக்கிறது… நீ யோசித்து சொல் என கூறவே, தனக்கு நடந்த பிரச்சனையை எடுத்து கூறினாள் முல்லை.

உடனே, முல்லையின் முதலாளி, கண்களில் கண்ணீர் வர இனிமேல் உங்களுக்கு நான் இருக்கிறேன் ஒரு அண்ணனாகவோ அல்லது தோழனாகவோ எனக் கூறுகிறார். ஆண்களே… ஒரு பெண்ணிடம் தவறான முறையில் பேச ஆரம்பிக்கும் முன் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால், இந்த நிலைமைக்கு வந்திருப்பார் என்று யோசித்து பாருங்கள்.