ஆசை பட நாயகி சுவலட்சுமியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற படங்களில் நடித்த இவர் 1977ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளி படிப்பை கொல்கத்தாவில் முடித்தார். பரதநாட்டியம் கற்றுக்கொண்டு பல மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் பெங்காலி இயக்குனர் சத்தியஜித்ரே இவரை நடிக்க கேட்டுள்ளார். சுவலட்சுமியும் அதற்கு சரி என்றார். இதனிடையில் அவர் கொல்கத்தாவில் சட்டம் பியில ஆரம்பித்தார்.

ஆனால் இயக்குனர் இறந்த போக அந்த படத்தை அவரது மகன் இயக்கினார். 1994ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்டதோடு, பல விருதுகளை பெற்றது.பிறகு தான் தமிழில் இயக்குனர் வசந்த் புதுமுகம் தேடிய போது சுவலட்சுமிக்கு ஆசை பட வாய்ப்பு வந்தது.ஆசை பட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் லவ்டுடே படத்தில் நடித்தார்.

5 ஆண்டுகளில் 25 படங்களுக்கும் மேல் நடித்த இவர் தமிழ், கன்னடம், தொழுங்கு மொழிகளில் நடித்தார்.பின் பிரபல டிவியில் ஒளிபரப்பான சூலம் என்ற தொடரில் நடித்தார். இறுதியாக நதிகரையினிலே என்ற படத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதன் பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் ஆசை நாயகி.

2007ஆம் ஆண்டு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடிக்க கேட்ட போது கர்ப்பமாக இருப்பதால் அந்த வாய்பை வேண்டாம் என்றார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.