
சென்னையில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிவந்த சினிமா நடிகர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.சேலையூர்,பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
அவற்றின் அடிப்படையில் தனி படை போலீசார் கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டின் திருடப்பட்ட செல்போனை கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கபட்டது அந்த செல்போன் மூலம் சேலையூர் பவனி நகரை சேர்ந்த ரவி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் இவர் சினிமாவிலும் சில சின்ன திரை தொடர்களிலும் நடிக்கும் நடிகர் என்பது தெரியயவந்தது.இவர் தான் காதலிக்கும் பெண்ணை ஆடம்பரமாக திருமணம் செய்வதற்காக பூட்டி கிடக்கும் வீடுகளில் திருடியதாக கூறினார்.
அவனது கூட்டாளியான பம்மலை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் என்ற கண்ணனையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 43 சவரன் நகைகளை கைப்பற்றினர்.இது பற்றி மேலும் தகவல்களுக்கு கிலுள்ள விடியோவை பாருங்கள்…