ஆண்மையை இல்லை என அவமானபடுத்தியதால் ஆண்மையை நிரூபிக்க வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை தனது மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்தவர் விஷ்வபாசு. இவர் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். இருவரின் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வீட்டில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விஷ்வபாசுவின் மனைவி தனது சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பியுள்ளார். இதுபற்றி அவரின் தந்தை மற்றும் உறவினர்கள் விசாரித்துள்ளனர். அதில் விஷ்வபாசு ஆண்மையில்லாதவர் என்று தெரியவந்துள்ளது.இதனையடுத்து அவர்கள் கொதிப்படைந்த நிலையில், விஷ்வபாசு குடும்பத்தினருடன் சண்டையிட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த அவர், வேறொரு பெண்ணுடன் அந்தரங்க உறவு வைத்து, அதனை வீடியோவாக எடுத்துள்ளார். அதனை தனது மாமனாருக்கும், மனைவியின் அத்தை ஒருவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தகவல் தொழிநுட்ப சட்டப் பிரிவின்கீழ் விஷ்வபாசுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.