தற்போது தொலைக்காட்சிகள் தங்களது சேனல்களை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பல வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர். இதில் ஒன்று தான் பிரபல டிவியில் நடந்த பிக்பாஸ். அதனைத் தொடர்ந்து மற்றொரு டிவி பல்வேறு நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறது. ஆம் மொடல்களைத் தெரிவு செய்யும் போட்டியாக சொப்பன சுந்தரி என்ற கவர்ச்சியின் உச்சத்தை தொடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் இந்நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு தான் இருக்கிறது. முன்பு கவர்ச்சியின் உச்சத்தை எட்டிய இந்நிகழ்ச்சியில் தற்போது பயமுறுத்தும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
ஆம் பாலடைந்த வீட்டிற்கு போட்டியாளர் ஒவ்வொருவராக செல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த டாஸ்கின் பொது பல போட்டியாளர்கள் கதறி அழுதார்கள்.
அதுமட்டுமின்றி மற்றொரு தற்போது வெளியான மற்றொரு ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்கள் இருவர் அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவு இதோ