ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்.. நான் செத்து போய்டவா என்று கதறி அழுத நடிகை! வைரலாகும் வீடியோ

பிரபல சேனலில் ஒளிபரபபாகி வரும் பொன்மகள் வந்தால் என்ற தொடரில் நடித்து வரும் நடிகை ஆயிஷா. இவர் சமீப காலமாக மியூசிக்கலி மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவ்விலையில், இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஆபாசமாக சிலர் கமெண்ட் செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆயிஷா, இன்று இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் வந்து அவர்களை திட்டியுள்ளார்.அதனுடன், பெண்களுக்கு இங்கு பல பிரச்சனைகள் இருக்கிறது.

அதைபற்றி எல்லாம் பேசத்தெரியாத உங்களுக்கு நான் என்ன ட்ரெஸ் அணிந்தால் என்ன? என்னை ஏன் கஷ்டபடுத்துக்கிறீர்கள். நீங்கள் ஒழுங்காக இருக்கிறீர்களா என யோசித்துப்பார்த்து மற்றவர்களை பற்றி குறை கூறுங்கள். மேலும், நான் ஆபாசமாக தான் ஆடை அணிகிறேன் என்றால் அதை ஏன் நீங்கள் பார்க்கிறீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அசிங்கமாக கமெண்ட் செய்யாதீர்கள் எனக் கூறி அழுதுள்ளார்.