தமிழ்,தெலுங்கு,மற்றும் மலையாள படங்களில் பிரபலமானவர் நடிகை சமந்தா,அவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.திருமணம் முடிந்து அவர் நடித்து வெளியான படம் ரங்கஸ்தலம் அந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை பெற்று தந்தது . அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் டாப் படங்கள் லிஸ்டில் மூன்றாவது இடம் பிடித்தது.
இதில் சமந்தா விவசாயம் செய்யும் கிராமத்து பெண்ணாக ராம் சரணுடன் ஜோடியாக நடித்திருந்தார். இதில் அவர்கள் இருவரும் நெருக்கமாக நடித்து லிப் லாக் முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி இருந்தது.இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தாவிடம் கேட்ட போது. திருமணமான நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் யாரும் கேள்வி கேட்பதில்லை,ஆனால் நடிகைகள் என்றால் இதெல்லாம் கேட்பீர்களே என்று கூறிய சமந்தா, தற்போது புதிய சர்ச்சை கேள்விக்கும் பதிலளிதுள்ள்ளார்.
தனக்கு தூங்கும் போது இருக்கும் பழக்கம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யு-டர்ன்’ மற்றும் ‘சீமராஜா’ ஆகிய திரைப்படங்கள் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.13ம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது இவ்விரு திரைப்படங்களின் புரொமோஷன் பணிகளில் சமந்தா தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் இன்று உரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, தனது பர்சனல் விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். சமந்தாவிடம் தூங்கும் போது உங்களுக்கு நடக்கும் வியாதி உண்டா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இல்லை.. ஆனால் பல் கடிக்கும் பழக்கம் உள்ளது என பதிலளித்துள்ளார்.