இதயம் பட நடிகை “ஹீரா” என்ன ஆனார் , எப்படி இருக்காங்க தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க

90களின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹீரா ராஜகோபால். 1971ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் ஹீரா. இவருடைய உண்மையான பெயர் ஜனனி ராஜகோபால். இவருடைய உண்மையான ராஜகோபால் அப்போலோ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர். அம்மா இராணுவத்தில் நர்ஸாக பணியாற்றியவர். பி.எஸ்சி சைக்காலஜி படித்துள்ள ஹீரா 1991ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளிவந்த இதயம் படத்தில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தி ருடா தி ருடா, நீ பாதி நான் பாதி, உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் என அனைத்து மொழி படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. மேலும், தல அஜித்துடன் காதல் கோட்டை மற்றும் தொடரும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனால் இருவருக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வந்தது.

அப்போது இந்த செய்தி சில வாரங்கள் பல வாரப்பத்திரிகையில் வந்தது. இந்த செய்தி இன்றுவரை செய்தியாகவே உள்ளது. இதனால் வாய்ப்புகள் குறைந்து போன ஹீரா கடந்த 2002ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர், இருவருக்கும் கருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்றார் ஹீரா. தற்போது ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுத்து வருகிறார். மேலும் பல புத்தகங்களையும் எழுதிவருகிறார் ஹீரா.