
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி அள்ளித் தருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்துள்ள தொகை பலரையும் முனுமுனுக்க வைத்துள்ளது.கேரளாவில் கடந்த மே மாதம் 29-ஆம் திகதி துவங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ஆம் திகதி முதல் தீவிரமடைந்தது.இதன் காரணமாக அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்கலால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்,அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்சம், கமல்ஹாசன் 25 லட்சமும், சிவ கார்த்திகேயன்10 லட்சம், நடிகை ரோகினி 2 லட்சமும், நயன்தாரா 10 லட்சமும் என கேரளா முதலமைச்சர் நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவியாக கொடுத்துள்ளார்.வெள்ளத்தால் கேரளாவின் பாதி பகுதி அழிந்துள்ள நிலையில், இவர் வழங்கியுள்ள தொகை பலரையும் முனுமுனுக்க வைத்துள்ளது.
ஏற்கனவே அரசியலில் குதித்த கமல் மிகவும் குறைவான தொகையை கேரள மக்களுக்கு வழங்கியுள்ளார் என கூறி வந்த நிலையில், ரஜினி கொடுத்துள்ளது அதைவிட பத்து லட்சம் குறைவாக உள்ளது. இதனால் பலர் ரஜினிக்கு கமலே பராவயில்ல என்று கூறி வருகின்றனர்.