ஒரு பாலிவுட் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை அனுயா பகவத் தமிழில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவனுக்கு ஜோடியாக சந்தானம் ஊர்வசி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்குவ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது இதனால் அனுயாவிற்கு தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் தொடர்ந்து மதுரை சம்பவம் மற்றும் நகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் இவருக்கு தோல்வி படங்களாக அமைந்ததால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் இல்லை. தொடர்ந்து விஜய் நடித்த நண்பன் படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் கடைசியாக விஜய் ஆண்டனி நடித்து வெளியான நான் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து படங்களில் நடிக்காத இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார்.
இவர் சமீபகாலமாக உடல் எடை கூடிப்போனதாலும், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியதாலும் அவ்வளவாக திரைப்படங்களில் தலைகாட்டுவதில்லை.தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் 30 வயதே ஆகும் இவர் தற்போது 45 வயது பெண்மணி போல புடவை கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ” இது தான் நடிகைகளின் வாழ்கை..! சில சமயம் கேர்ள் ஃப்ரெண்டாக, சில சமயம் அம்மா-வாக..” என்று கூறியுள்ளார்.