மீண்டும் அந்த நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தனது தி ருமண தி ட் டத்தை நடிகை லக்ஷ்மி மேனன் த ள்ளிப் போட்டுள்ளதாக தகவல்கள் க சிந்துள்ளன.மலையாளத்தில் வெளியான ரகுவின்டே சொந்தம் ரஸியா படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன்.கடந்த 2012ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போதே ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்ததால், தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் லக்ஷ்மி மேனன். 2012ம் ஆண்டு சசிகுமாரின் சுந்தரபாண்டியன் மற்றும் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி ஆகிய இரு படங்களில் நடித்த லக்ஷ்மி மேனனுக்கு பல விருதுகள் குவிந்தன. சின்ன வயசு பொண்ணா இருந்தாலும், தனது மெச்சூரிட்டியான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார் லக்ஷ்மி மேனன். சுந்தரபாண்டியன், கும்கி பட வெற்றியைத் தொடர்ந்து குட்டிப் புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், றெக்க என பல முன்னணி நடிகர்களுடன் செம பீக்கில் நடித்துக் கொண்டு இருந்தார்.
சசிகுமார், விக்ரம் பிரபு, விஷால், சித்தார்த் என பல நடிகர்களுடன் முன்னணி நாயகியாக நடித்து வந்த லக்ஷ்மி மேனன், சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, உச்சத்தில் இருந்த ஹீரோயின் மார்க்கெட் கிடு கிடுவென சறுக்கி புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மார்க்கெட் காலியான நிலையில், தனது சொந்த ஊரான கேரளாவில் நடன பள்ளி வைத்து நடத்தி வரும் லக்ஷ்மி மேனனுக்கு, டாக்டர் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்ததாகவும் ஆனால், அந்த ஒரு காரணத்திற்காக திருமண ஏற்பாட்டை லக்ஷ்மி மேனன் தள்ளிப்போட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
2012ம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் நடித்த இருவரது ஜோடி பொருத்தமும் பிரமாதமாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் விக்ரம் பிரபுவுடன் நாயகியாக நடிப்பு வந்த காரணத்தால், தனது திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளாராம் லக்ஷ்மி மேனன்.
ஏற்கனவே லக்ஷ்மி மேனன், பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த யங் மங் சங் படம் இன்னமும் ரிலீசாகமால் கிடப்பில் கிடப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல கெளதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த சிப்பாய் படமும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. லக்ஷ்மி மேனனுக்கு வெறும் 23 வயதே ஆவதால், சினிமாவில் இன்னொரு ரவுண்டு தாராளமாக வரலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.