
இயக்குனர் அட்லீ – விஜய் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் “பிகில்”. பெண்கள் கால்பந்தாட்ட அணியை மையமாக வைக்கப்பட்டு எடுத்த இந்த படத்தில் ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், இந்திரஜா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் அம்ரிதா ஐயர் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். அவர் நடித்திருந்த தென்றல் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கும் இவர் சில நாட்களுக்கு முன்பு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். இந்த க்யூட் பியூட்டியின் அழகு புகைப்படங்களை ஆதரித்த ரசிகர்கள், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டால் கலாய்ந்து தள்ளுகின்றனர். மேலும் இப்படி
எல்லாம் கவர்ச்சியா போட்டோ போடாதீங்க என உரிமையுடன் அட்வைஸ் செய்தனர்.
அதனை தொடர்ந்து, தற்போது அவர் வெளியிட்டுள்ள சில க்யூட்டான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இத.. இத.. இதைதான் எதிர்பார்த்தோம் என கூறி லைக்குகளை அள்ளி கொட்டி வருகிறார்கள்.