இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைபடங்கள்..!! காரணம் என்ன தெரியுமா?

1913-ல் தாதா சாஹிப் இயக்கிய முதல் இந்திய திரைப்படம் ராஜா ஹரிஷ் சந்திரா.பின் 1920-ல் இந்தியன் சினிமாட்டோகிர்ப் ஆக்ட் (Indian Cinematograph Act) என்பது சென்சார் போர்டாக வந்தது. 1920 களில் உள்ள சென்சார் போர்டில் காவலர்கள் தான் பணி புரிந்தார்கள்.1952ஆம் வருடம் பம்பாய் போர்டு ஒப் பிலிம் சென்சார் என்பது வந்தது.இதில் இந்தியா கீழ் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் ஒருங்கி இணைக்கப்பட்டது. பின் இதன் பெயரை சென்ட்ரல் போர்டு ஒப் பிலிம் சென்சார் என்று பெயரை மாற்றினார்கள்.இப்படி சென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களை பார்க்கலாம்.

1.) Un freedom-இரண்டு பெண்கள் காதலித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போல் கதை அமைக்கப் பட்டு இருக்கும், எனவே இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.

2.) Sins-கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் இளம் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் படி காட்சிகளும், திரைக்கதையும் அமைந்து இருந்ததால் இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.

3.) Water-1938 நடந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.காசியில் உள்ள ஆசிரமங்களில் விதவை பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை காட்டும் திரைப்படம்.இப்படத்தை சென்சார் போர்டு தடை செய்தது.

4.) Ore Oru Gramathule-நிழல்கள் ரவி, லட்சுமி நடித்த இப்படம் 1989-ல் சென்சார் போர்டுனால் தடை செய்யப்பட்டது, பின் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இப்படத்தை வெளியிட்டார்கள்.ஜாதி வேற்றுமை உள்ளது என்று இப்படத்தை முதலில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

5.) The pink mirror-கொச்சையான மற்றும் சட்ட விரோதமான கருத்துக்கள் இருப்பதாக கூறி இப்படத்தை தடை செய்தார்கள்.

6.) Fire-சகோதரிகளுக்கு உள்ள காதலையும், அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போலவும் காட்சிகளும்,கதையும் அமைக்கப் பட்டதால் இப்படத்தை தடை செய்தார்கள்.

7.) Bandit Queen-பூலான் தேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டது தான் இக்கதை, தகாத வார்த்தைகள் இருந்ததனால் இப்படத்தை தடை செய்தார்கள்.

8.) Kamasutra A Tale Of Love-வரலாற்று படமாகிய இதில்,நிறைய காட்சிகளில் நடிகர்கள் நிர்வாணமாக நடித்ததால் இப்படத்தை தடை செய்தார்கள்.மேலும் 16 ஆம் நூற்றாண்டை மைய்யமாக வைத்து எடுக்கப் பட்ட இத்திரைப்படத்தில் தகாத உறவுகளை காட்சி அமைப்பு செய்து இருந்தார்கள் என்றும் தடை செய்தார்கள்.