இந்த அறிகுறிகள் தென்படுகிறதா..? சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…!

ஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது.எனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதால் அந்த நோயின் தீவிரத்தை குறைக்கலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதால், அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு பிரச்சனைகளும் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும். ஒருவரின் உடலில் இருந்து அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும்.

உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல், உடலுக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து வெளியேற்றப்படும். இதனால் திடீர் எடை குறைவு ஏற்படும். சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து அதற்கு தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடற்சோர்வு, அசதி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகி, அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வு இருப்பதுடன், மரத்துப் போகச் செய்யும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் குறைந்து விடும். இதனால் திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமாகுவதை தாமதப்படுத்தும்.

சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.