இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் காத்திருக்கும் அதிஷ்டம்..! சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஓகஸ்ட் மாதம் நடக்கவுள்ள மாற்றம்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 6 ராசிகளுக்கும் ஜூலை முதல் டிசம்பர் வரை எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மகரம் – 23 டிசம்பர் – 20 ஜனவரி


வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.உத்தியுாகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்புார்த்த பலன்கள் கிடைக்கும்.

.கன்னி – 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்


உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை.வேலை செய்கின்ற இடத்தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம் – 24 செப்டம்பர்- 23 அக்டோபர்


நீங்கள் இதற்கு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள்.உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.பரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம் – 31 ஜூலை – 21 ஓகஸ்ட்


தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.உங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்

விருச்சிகம் – 24 அக்டோபர்- 22 நவம்பர்


உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும்.

அடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு மற்றும் மனைகள் வாயிலாக எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.

தனுசு – 23 நவம்பர்- 22 டிசம்பர்

வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சிகள் உண்டாகின்றன. திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். வேலை ஆட்களின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். வெளியூா் பயணங்களினால் தடைபட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.