ஒருவர் நம்முடன் பேசும்போதும், பழகும்போதும் அவர்கள் நம்மை பற்றியும், நாம் சொல்ல வருவதையும் புரிந்து கொள்ளும்போதுதான் அந்த உறவை தொடர நமக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கு எதிர்மறையாக அவர்கள் நாம் பேசுவதையோ, நமது நோக்கத்தையோ புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்ளும்போது அது உங்கள் உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும். இது சிலருக்கு சூழ்நிலைகளால் நடக்கும், ஆனால் சிலருக்கோ அது இயல்பாகவே நடக்கும். ஒருவரை புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். உண்மைதான் சில ராசிகளில் பிறந்தவர்களை புரிந்துகொள்வது என்பது மற்றவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அவர்கள் நல்லது செய்கிறார்களா அல்லது கெட்டது செய்கிறார்களா என்பதை புரிந்து கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் எப்போதும் அடிக்கடி மாறக்கூடிய மனநிலையுடன்தான் இருப்பார்கள். அவர்களின் சோகத்திற்கோ, மகிழ்ச்சிக்கோ என்ன காரணம் என்று கண்டறியவே முடியாது. அவர்களுக்கு குடும்பம்தான் அனைத்தையும் விட முக்கியம், அதுவே அவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்பட காரணம். அதுமட்டுமின்றி அவர்கள் தன் கடந்தகாலத்தில் இருந்து வெளிவர மிகவும் சிரமப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பழைய சம்பவங்களை நினைத்து நினைத்து அதிகம் கோபப்படுவார்கள். அவர்களை புரிந்துகொள்ள ஒரே வழி அவர்கள் செய்யும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு காத்திருப்பதுதான்.
விருச்சிகம்
நீங்கள் விருச்சிக ராசிக்காரர்களை பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்க ஒரே காரணம் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதுதான். சிக்கலான மனநிலை கொண்ட இவர்களை கையாளுவது என்பது முடியாத காரியம். வாழ்க்கையை பற்றி யோசிக்கும்போது அவர்கள் அதன்மீது அதிக ஆர்வமும், கவலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் நோக்கம் முடியும்வரை அவர்கள் வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டார்கள். இவர்கள் பழிவாங்குவதில் அதிதீவிரமாக இருப்பார்கள் எனவே ஒருபோதும் விருச்சிக ராசிக்காரர்களுடன் சண்டை போடாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்கார்கள் மிகவும் மர்மமானவர்கள். இவர்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது, ஏனெனில் இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அதிகம் வெளிகாட்டமாட்டார்கள். அதேசமயம் அவர்கள் மற்றவர்களை விட எப்போதும் தனித்துவமாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் ஒருபோதும் தன்னை புரிந்து கொள்ளுங்கள் என்று மற்றவர்களிடம் சென்று கூறமாட்டார்கள். இது மற்றவர்கள் தங்களின் நிலையை இவர்களுக்கு ஏற்றாற்போல உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு தரும். அதேசமயம் இவர்கள் தங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று அதிக விரக்திக்கும் ஆளாவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை எளிதில் மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. தனது உணர்வுகளை இவர்கள் வார்த்தையாக வெளிப்படுத்துவதை காட்டிலும் உணர்ச்சியாக வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் தனது குறிக்கோளை வார்த்தையாக வெளிப்படுத்துவதில் பெரும்பாலும் தோற்றுவிடுவார்கள். இவர்கள் எளிதில் மனதளவில் காயப்பட்டுவிடுவார்கள், ஆனல் அதனை வெளிப்படுத்துவதை விட அதை மறைக்கவே அவர்கள் முயலுவார்கள். இவர்களை பற்றி கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் அவர்கள் தங்களை தவிர மற்ற அனைவருக்கும் நட்பாக இருப்பார்கள்.
மிதுனம்
இவர்கள் தங்கள் மனதையும், மனநிலையையும் நொடிக்குநொடி மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் தங்கள் எண்ணங்களை உரையாடல் மூலம் வெளிப்படுத்துவதில் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் செயல்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது மட்டும்தான் நமக்கு எரிச்சல் ஏற்படும். இவர்களுக்கு பொறுமையும், நிதானமும் சுத்தமாக இருக்காது. இவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் அவர்களை புரிந்துகொள்ள வேண்டுமென்று அவசியமில்லை.