இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் சனி பகவான் நெருங்குவதற்கு அஞ்சி நடுங்குவார்? ஏழு தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் அதிசயம்!

பச்சரிசியால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம்முடைய பாட்டி காலம் முதல் வழிவழியாகச் சொல்லி, நமக்குத் தெரிந்திருக்கும்.ஆன்மீகத்துக்கும் பச்சரிசிக்கும் இருக்கிற தொடர்பு மிக ஆழமானது. அது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.நிறைய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு நாம் பச்சரிசியைப் பயன்படுத்துகிறோம். ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைக் கூட பச்சிரிசி பரிகாரம் மூலம் தீர்க்க முடியும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியோர்கள்.
சனிக்கிழமை நாளில் காலையில் நேரமாக எழுந்து குளித்துவிட்டு, ஒரு கை நிறைய பச்சரிசியை அள்ளிக் கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

பின்னர் அதை அப்படியே உள்ளங்கையில் மூடி வைத்துக் கொண்டே விநாயகப் பெருமானை மூன்று மூன்று முறை சுற்றி வர வேண்டும்.அதன்பின்பு விநாயகர் சிலையைச் சுற்றிலும் இந்த பச்சரிசியைத் தூவி விட வேண்டும். அப்படி நாம் போட்ட பச்சரிசிகளை முழுமையாக எறும்புகள் தூக்கிச் சென்றுவிட்டால் நம்முடைய ஏழு ஜென்மமாக செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போகும்.
எறும்புகள்நாம் வீசிய அரிசியை எறும்புகள் மழைக்காலத்தில் வைத்து சாப்பிடுவதற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.எறும்பினுடைய எச்சிலானது பச்சரிசியின் மீது பட்டுவிட்டாலே போதும், பச்சரிசிக்கு கெட்டுப் போகும் தன்மையானது நீங்கிவிடும்.

இந்த பச்சரிசியை எறும்புகள் சாப்பிட்டு முடிக்க கிட்டதட்ட இரண்டறை வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த இரண்டறை ஆண்டுகள் வரையிலும் எறும்புகளின் கூட்டினை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.
கிரக நிலைகள்இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலைகள் அனைத்தும் மாறும். அப்படி மாறியதும் பாவங்களின் வீரியங்கள் வலுவிழந்து போய்விடும்.அதனால் அடிக்கடி பெரியோர்கள் அடிக்கடி எறும்புகளுக்கு அரிசி இரையாகப் போட வேண்டும் என்று சொல்வார்கள்.

சனி பகவான்-ஒரு எறும்பு நாம் போடுகின்ற பச்சரிசியைச் சாப்பிட்டால், 108 பிராமணர்களுக்கு அன்னதானம் போட்டதற்கும் அவர்கள் நிறைவாகச் சாப்பிட்டதற்கும் சமம்.இப்படிச் செய்வதன் மூலமாக, சனி பகவானின் தொல்லைகள் கூட உங்களை நெருங்காது.இதன்மூலம் மிகக் கொடுமையான விளைவுகளைத் தரக் கூடிய அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் தீங்குகளும் உங்களை நெருங்காது.