இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் இன்று தன லாபம் அடிக்க போகுதாம்! யார் அந்த அதிர்ஷ்டகாரர் தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். அதன்படி இன்றைக்கு ரிஷபம், சிம்மம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மிதுன ராசிக்காரர்கள் விவாதத்தை தவிர்க்க வேண்டும். மீனம், மேஷம், விருச்சிகம், கன்னி ராசிக்காரர்களுக்கு தன லாபம் உண்டாகும். கடகம், கும்பம், தனுசு ராசிக்காரர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.

மேஷம்
நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் வரும். மாற்றங்கள் செய்வதால் நிறைய சாதகமான சூழல்கள் உண்டாகும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் நினைத்த பலன்களைத் தரும். தொழிலுக்கு பெற்றோர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.

ரிஷபம்
எந்த காரியமாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்
கால்நடைகளால் லாபம் உண்டாகும். மனதில் உண்டான கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

கடகம்

தொழில் மூலம் பிரபலமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசு வகை உதவிகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். பொன்,பொருள் சேர்க்கை ஏற்படும்.

சிம்மம்
அந்நியர்கள் மூலம் பொருளாதாரம் சிறப்படையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் புகழ் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கடல்மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

கன்னி
தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும்.

துலாம்
அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.

விருச்சிகம்
கால்நடைகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

தனுசு
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்
புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வான் வழியான சம்பந்தம் உடைய தொழில் செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். சுயதொழில் புரிகின்றவர்கள் தங்களுடைய முயற்சியால் லாபம் அடைவார்கள். சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும்.

கும்பம்
உறவினர்களின் வருகையினால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அமைதியுடன் செயல்படுங்கள்.

மீனம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.