மனிதராய் பிறந்த அனைவருக்குமே ஒரு தனித்துவம் இருக்கும். நாம் தினமும் தொடர்ந்து செய்யும் செயல்கள் நமது மூளையில் பதிவாகிவிடும்.
பின்னர் அதுவே பழக்கமாக மாறிவிடும், இந்த பழக்கம் நல்லதாக இருந்தால் உங்கள் வாழ்க்கையும், எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.
அதுவே தவறான செயல்கள் பழக்கங்களாக விட்டால் அதன் விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
நமது பழக்கங்கள் நாம் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் பிரதிபலிப்பாகும். நமது சாஸ்திரங்களில் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் என்னென்ன விளைவு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி நம்மிடம் இருக்கும் சில பழக்கங்கள் நம்முடைய எதிர்காலத்தை சிதைக்கும். ஏனெனில் நாம் சாதாரணமென நினைத்து செய்யும் சில செயல்கள் கடவுளின் கோபத்தை தூண்டுவதாக கூட இருக்கலாம்.
வேலை செய்யுமிடம், செல்லும் இடம் என அனைத்து இடங்களிலும் எச்சில் துப்புவதை பழக்கமாக கொண்டிருப்பவர்கள் வெற்றி, சமூக மரியாதை, செல்வம் போன்றவற்றிலிருந்து விலகித்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த பழக்கம் உங்களுக்கு லட்சுமி தேவியின் சாபத்தை பெற்றுத்தரும்.
நடக்கும் போது
தேய்த்து கொண்டு நடப்பது இது பல வேதங்களிலும் தவறான ஒரு பழக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் பாதத்தை தேய்த்து கொண்டு நடப்பது உங்கள் விதிக்கு தேய்மானம் கொண்டு வருவதை குறிக்கிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் ராகுவால் பாதிப்புகள் ஏற்படும்.
கை மற்றும் முகத்தை கழுவாமல் இருப்பது
நாள் முழுவதையும் வெளியே கழித்த பின்னர் மீண்டும் வீட்டிற்க்கு திரும்பியவுடன் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்க வேண்டியது கை, கால் மற்றும் முகத்தை கழுவ வேண்டியதுதான்.
இது சுகாதாரமான பழக்கம் மட்டுமல்ல இது நீங்கள் அழைத்துவரக்கூடிய எதிர்மறை சக்திகளை விரட்டும் பழக்கமாகவும் இருக்கிறது.
ஆனால் இந்த பழக்கம் இல்லாமல் இருப்பது உங்களுக்கு நீங்களே ஆபத்தை உருவாக்கி கொள்ளும் செயலாகும்.
நீண்ட நேரம் விழித்திருப்பது
நமது சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி சந்திரன் பிரகாசமாகவும், வலிமையாகவும் இருக்கும் நேரத்தில் தூங்கி விடுவது நல்லது.
சந்திர ஒளியானது நமது உடலையும், மனதையும் அமைதிப்படுத்துவதோடு நம்முடைய ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.
ஆனால் அந்த சமயத்தில் தூங்காமல் விழித்திருப்பது சந்திரனின் கடமையில் நாம் குறுக்கிடுவது போலாகும். இதனால் மனஅழுத்தம், ஆரோக்கிய பிரச்சினைகள், குழப்பம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
குளியலறையை அசுத்தமாக விடுவது
குளியலறையை உபயோகப்படுத்தி விட்டு அதை சுத்தம் செய்யாமல் விடுபவர்கள் அல்லது குளியலறை அசுத்தமாக இருப்பதை நினைத்து கவலைப்படாதவர்கள் ஜாதகத்தில் சந்திரனின் நிலை பலவீனமடையும். இது உங்களுக்கு தொழில்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
செருப்பை தூக்கியெறிவது
செருப்பை முறையாக கழட்டி விடாமல் நினைத்த மூலைக்கு தூக்கியெறிந்து விட்டு செல்வது மிகவும் மோசமான பழக்கமாகும்.
இதனால் உங்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும். உங்கள் காலணியை அவமதிப்பது உங்களின் சமூக அந்தஸ்தை பாதிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
அசுத்தமான சமையலறை
உங்கள் சமையலறை அசுத்தமாகவோ அல்லது கலைக்கப்பட்டோ இருந்தால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் எப்பொழு
சத்தமாக பேசுவது
வழக்கமாக பேசுவதை விட அதிக சத்தத்துடன் பேசுபவர்கள் சனிபகவானால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த பழக்கம் உடையவர்கள் வாழ்க்கை முழுவதும் உறவுகளை பாதுகாத்து கொள்ளவும், சீராக பராமரிக்கவும் போராட வேண்டியிருக்கும்.
வயதில் மூத்தவர்களை அவமதிப்பது
வயதில் முதியவர்களை அவமதிப்பது, அவர்களின் அறிவுரைகளை புறந்தள்ளுவது, அவர்களின் தேவைகளை புறக்கணிப்பது போன்ற பழக்கமுள்ளவர்களின் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி இருக்காது.
இதனால் உங்கள் குடும்பத்தில் குழப்பங்கள் நிலவுவதுடன், சமூகத்தில் பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
மேஜையில் அழுக்கு பாத்திரங்களை வைப்பது
சாப்பிட்ட பிறகு தட்டு மற்றும் பாத்திரங்களை மேஜையில் அப்படியே வைத்து செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. வேறு யாராவது வான்ஸு சுத்தம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும்.
தன்னுடைய வேலையை கூட மற்றவர்கள் தலையில் இவர்களுக்கு வெற்றிக்கு தகுதியானவர்கள் அல்ல. இந்த பழக்கம் உடையவர்களுக்கு சனி மற்றும் சந்திர தோஷம் ஏற்படும் வாய்ப்புள்ளது.