இந்த ராசிக்காரர்கள் எப்படி பழிவாங்குவார்கள் தெரியுமா? நண்பர்களே உஷாரா இருங்க

ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தனித்துவம் அவர்களின் குணநலன்களை வெளிப்படுத்தும். மனிதனுக்கு பசி, தூக்கம், சோகம், மகிழ்ச்சி போன்று பழிவாங்கும் உணர்வும் அனைவருக்கும் பொதுவான ஒரு உணர்வாகும். சூழ்நிலையை பொறுத்து அது நல்லதாகவும், கெட்டதாகவும் அமையும்.தற்போது எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி பழிவாங்குவார்கள் என்பதை இங்கு காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உடனடியாக பழிவாங்குபவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் மோதினால் உடனடியாக பதிலடி கிடைக்கும் வகையில் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்களின் பழிவாங்கும் முறையில் பொறுமை இருக்காது.ஏனெனில் இவர்கள் பழிவாங்க முடிவெடுத்துவிட்டால் யோசிக்காமல் எதிர்வினை ஆற்றிவிடுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் திட்டமிட்டு பழிவாங்குபவர்களாக இருப்பார்கள். தாங்கள் விரும்புபவர்களே காயப்படுத்திவிட்டாலும், அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.அத்துடன் என்றாவது ஒருநாள் அதற்காக நிச்சயம் பழிவாங்கி விடுவார்கள். இவர்கள் காத்திருந்து பழிவாங்கும்போது அதன் பாதிப்பு பெருமளவில் இருக்கும்.

மிதுனம்
இந்த ராசிக்காரர்களின் பழிவாங்கும் விதம் ஆச்சர்யப்படுத்தும் விதமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களின் செயல்பாடுகள் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தும். இவர்கள் காயப்படும்போது அல்லது தீங்கினை சந்திக்கும்போது பொறுமையுடன் இருப்பார்கள். ஆனால், அதற்காக மிகப்பெரிய அளவில் பழிவாங்க காத்திருப்பார்கள். இவர்கள் எதிராளியுடன் பழகி அவர்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டு, பின்னர் சரியான சமயத்தில் அதனை பயன்படுத்தி பழிவாங்குவார்கள்.

கடகம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமாக பழிவாங்கக்கூடியவர்கள். சந்திரன் ஆட்சி செய்வதால் இவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.இவர்களின் அன்பு, அக்கறை, பாசம் எல்லாமே ஒரே இரவில் கொலைவெறியாகக் கூட மாறக்கூடும். இவர்கள் எதிராளியை எந்த அளவுக்கு காயப்படுத்த முடியுமோ அவ்வளவு காயப்படுத்துவார்கள்.மிகவும் இரக்கமற்ற முறையில் பழிவாங்க கூடிய இவர்கள், அதில் எந்த வித வருத்தமும் படமாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் உடனுக்குடனேயே பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு கோபம் எப்போதாவது தான் வரும். ஆனால், அவ்வாறு கோபம் வந்தால் இவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும்.இவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மன்னிப்பை எதிர்பார்த்து காத்திருந்தால் அதற்கான முடிவை இவர்கள் மட்டுமே எடுக்க முடியும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் பொறுமையை கடைபிடித்து பழிவாங்குவார்கள். இவர்களுக்கு யார் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தண்டனையை நிச்சயம் வழங்குவார்கள்.இவர்கள் தங்களுக்கு தீங்கு விளைவித்தவர்களை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

துலாம்
இந்த ராசிக்காரர்கள் நேர்மையாக பழிவாங்கக் கூடியவர்கள் ஆவர். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் சமநிலையுடன் இருப்பார்கள் என்றாலும், வாழ்வில் மறக்க முடியாத அளவிற்கு பழிவாங்குவார்கள்.இவர்கள் பழிவாங்குவதை எதிராளியே நியாயம் தான் என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் இவர்கள் நடந்துகொள்வார்கள். மேலும் இவர்கள் அடைந்த காயங்களையும், அவமானங்களையும் எப்போதும் மறக்கமாட்டார்கள்.

 

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் துன்புறுத்தும்படி பழிவாங்கக் கூடியவர்கள். இவர்களுடன் மோதிவிட்டால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் வன்முறையில் அதிகம் ஈடுபாடு உள்ள இந்த ராசிக்காரர்கள், எதிராளியை உடல் ரீதியாக மிகவும் துன்புறுத்துவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தீவிரமாக பழிவாங்க மாட்டார்கள். எனவே இவர்களை காயப்படுத்துபவர்களை தனுசு ராசிக்காரர்கள் எளிதில் மன்னிக்க வாய்ப்புள்ளது. எனினும், எல்லைமீறி இவர்களை யாராவது காயப்படுத்தினால் அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள். ஆனால் அந்த எதிர்வினை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தனித்துவமான முறைகளைப் பயன்படுத்தி பழிவாங்குவார்கள். இவர்கள் பழிவாங்கும்போது அமல்படுத்தும் திட்டம் அவர்களின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கும்.இவர்கள் பழிவாங்குவது எதிராளிக்கு இறுதி அடியாக இருக்கும். எதிராளியை முழுமையாக பழிவாங்கியவுடன் தான் இந்த ராசிக்காரர்கள் அவரை மன்னிப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் நிதானமாக பழிவாங்க நினைப்பார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டாலும் நிதானமாக இருப்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு குறைந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது மட்டும்தான்.இவர்களுக்கு அளவுக்கு மீறி யாராவது தொல்லை தந்தால், நிரந்தரமாக அவர்களை வாழ்வில் இருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். இதனால் ஒரு நேர்மையான உறவை தொல்லை தருபவர் இழக்கக்கூடும்.

மீனம்
அமைதியான மீன ராசிக்காரர்கள் அவர்களுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் மிகவும் மூர்க்கமாக மாறிவிடுவார்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதால், இவர்கள் எளிதில் காயப்பட்டுவிடுவார்கள். ஆனால், உடனடியாக அதற்கு எதிர்வினை ஆற்றிவிடுவார்கள்.