இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி குடுத்த பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் முடிவுக்கு வர உள்ளது, 82 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பிக் பாஸ் வீட்டில் 8 பேர் இருப்பதால் 100 நாட்களில் இருந்து 105 நாட்களாக இந்த நிகழ்ச்சியின் நாட்களை அதிகரித்துள்ளனர்.மேலும் இந்த வார

நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, சென்றாயன், ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐஸ்வர்யாவின் அட்டகாசங்களால் வெறுப்பில் இருந்த ரசிகர்கள் அவர் நாமினேஷனுக்கு வர வேண்டும் என ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.ஏறத்தாழ பாதி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில் போட்டி கடும் உச்சத்தை அடைந்துள்ளது .

மேலும் இந்த சீசன் 2 பிக் பாஸ் தற்போது சூடுபிடித்துள்ளது.இணைபிரியா தோழிகளாக இருந்த ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளது.தற்போது அவர் நாமினேஷனில் வந்து விட்டதால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ஐஸ்வர்யா தான் வீட்டை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.