இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியளிக்கும் தகவல்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபடுவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகம் நிலவி வருகிறது.தற்போதைய நிலவரபடி இந்த வாரம் நடந்து வரும் வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதில் ஐஸ்வர்யாவைவிட மும்தாஜிற்கு குறைவான வாக்குகள் பதிவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்றும் அதனால் மும்தாஜ் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்று நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற்றபட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தாலும், இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் சதி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக மும்தாஜை தான் தவறானவர் என்பது போலவும் அவர் தான் அதிகப்படியான தவறுகள் செய்தவர் என்பது போல கடந்த நாட்களாக காண்பித்து வருகின்றனர்.அதே போல போட்டியாளர்களும் சரி, தற்போது பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ள சீசன் 1 போட்டியாளர்களும் சரி.

மும்தாஜை தான் அதிகம் குறை கூறி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் மும்தாஜ் மீது வெறுப்பை வரவழைத்து மும்தாஜிற்கு வரும் வாக்குகளை திசை திருப்ப பார்க்கின்றனர்.இதனால் மக்கள் ஐஸ்வர்யா மீது இருந்த வெறுப்பை மறந்து மும்தாஜிற்கு எதிராக வாக்களிக்க ஒரு சாதகமாக அமைந்தது.

அதே போல இந்த வாரம் மக்கள் ஆதரவு முழுக்க ரித்விகாவிற்கு தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் ஐஸ்வர்யாவை விட மும்தாஜிற்கு தான் மிகவும் கம்மியான வாக்குக்கள் பதிவாகி இருக்கிறது என்று கூறி இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பற்றப்பட்டாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.